தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.!
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தமிழகத்தில் தீவிரமடைவதன் மூலமாக சில மாவட்டங்களில் கனமுதல் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

அடுத்து வருகின்ற 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில், அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும், என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.