தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் அடுத்து வரும் 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2021-05-13 09:58 GMT

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் அடுத்து வரும் 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிள்ளதால், நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News