கோவை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாயம்: இஸ்ரோ தகவல் என்ன?

கோவை உட்பட ஆறு மாநிலங்களுக்கு தற்பொழுது நிலச்சரிப்பு அபாயம் விடுக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-03-12 00:15 GMT

கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயகரமான பகுதி இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. குறிப்பாக இஸ்ரோவின் கீழ் இயங்கும் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் எனப்படும் தேசிய துணை உணர்வு மையம் சார்பில் நம் நாட்டில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஒரு ஆவின் முடிவில் தமிழகத்தில் ஆறு மாவட்டங்கள் உள்ளடக்கிய நாட்டின் மொத்தமாக 147 மாவட்டங்களில் இந்த அபாயம் நிறைந்த பகுதிகளாக தற்பொழுது வரையறை செய்யப்பட்டு இருக்கிறது.


இதில் உத்தரகாண்டில் உள்ள இரண்டு மாவட்டங்கள் முதல் இரண்டு நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் உத்தரகாண்டில் 13 மாவட்டங்கள் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது என்று கூறப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நிலச்சரிவுக்கு உள்ளான ஜோஷிமத் நகரம் அமைந்துள்ள சமவெளி மாவட்டம் 19 ஆவது இடத்தை தற்போது பிடித்து இருக்கிறது. இதில் நிலச்சரிவு அபாயம் மிகுந்த மாவட்டங்கள் பட்டியலில் தமிழகத்தின் கோவை மாவட்டம் முப்பத்தி ஆறாவது இடத்தில் தற்பொழுது இருக்கிறது.


41-வது இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் அமைந்து இருக்கிறது. 43-வது இடத்தில் கன்னியாகுமரி, 59ஆவது இடத்தில் தேனி மாவட்டம், 72 வது இடத்தில் திருநெல்வேலி, 85 வது இடத்தில் நீலகிரி மாவட்டம் இடம்பெடுத்து இருக்கிறது. இது தொடர்பான தன்னுடைய விரிவான அறிக்கையை அதிகாரப்பூர்வமான வலைதள பக்கத்தில் இஸ்ரோ பகிர்ந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News