ஐந்து மாதமாக நிறுத்தப்பட்ட ஏசி பேருந்து அக்டோபர் 1ம் தேதி முதல் இயக்கம் !
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐந்து மாதமாக நிறுத்தப்பட்டிருந்த ஏசி பேருந்து சேவை, அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கிறது.;
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐந்து மாதமாக நிறுத்தப்பட்டிருந்த ஏசி பேருந்து சேவை, அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் தொற்றின் வேகம் குறைந்த நிலையில் தளர்வுகள் படிப்படியாக அரசு அறிவித்து வந்த நிலையில், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏசி பேருந்துகள் இயக்குவதற்கு தடை நீக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏசி பேருந்துகளை அக்டோபர் 1ம் தேதி முதல் இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த மே 10ம் தேதி நிறுத்தப்பட்டிருந்த ஏசி பேருந்து சேவை 5 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
Source: News 7 Tamil
Image Courtesy:Twiter