தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வயதான வாக்காளர்கள்: தமிழக தேர்தல் ஆணையர் தகவல்.!
தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.
தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை கொரோனா தொற்று காரணமாக முதிவயர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சத்யபிரதா சாஹு கூறியதாவது: தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.91 லட்சம் பேர் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,253 வாக்காளர்கள் உள்ளனர் என்று கூறினார்.