தமிழக சட்டப்பேரவை மே 11ம் தேதி கூடுகிறது.. சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு.!

தமிழக சட்டப்பேரவை வருகின்ற மே 11ம் தேதி கூடுகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2021-05-08 10:14 GMT

தமிழக சட்டப்பேரவை வருகின்ற மே 11ம் தேதி கூடுகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதே போன்று அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. நேற்று ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.




 


இதனிடையே, சட்டப்பேரவை கொரோனா தொற்று பரவல் இடையே கூடுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அதன்படி மே 11ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது தற்காலிக சபாநாயகர் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என கூறப்படுகிறது.

Similar News