சட்டமன்ற சபாநாயகராகிறார் அப்பாவு.. துணை சபாநாயகராகிறார் கு.பிச்சாண்டி.!
தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர். இதனிடையே 16வது சட்டமன்றத்தின் சபாநாயகராக யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ராதாபுரம் எம்.எல்.ஏ. அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி தேர்வாகிறார். இவர் தற்போது 6 முறை எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.