தமிழகத்தில் நாளை முதல் வங்கி சேவை நேரம் குறைப்பு!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இதனால் கடந்த முறையை விட இரண்டாம் அலை மிக தீவிரம் அடைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் நாளை முதல் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று மாநில வங்கியாளர்கள் குழுமம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இதனால் கடந்த முறையை விட இரண்டாம் அலை மிக தீவிரம் அடைந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று முழுநேர ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இருக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.