தி.மு.கவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சவால்!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த திறனற்ற தி.மு.க.,

Update: 2023-03-06 01:32 GMT

அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகம் தற்பொழுது தி.மு.க ஆட்சியின் கீழ், அமைதியை இழந்து நாள்தோறும் பேச்சுப் பொருளுக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு தினமும் ஒரு பிரச்சனை தான். அந்த வகையில் தற்பொழுது வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போன்ற வீடியோ தான் தமிழகத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வகையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.


இந்தியாவில் அனைவரும் சகோதர சகோதரிகளாக தான் பழகி வருகிறார்கள். தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் தற்பொழுது தான் வடமாநில தொழிலாளர்கள் மீது அதிகமான வெறுப்பு கிளம்பி இருக்கிறது என்று கூறப்பட்டு இருக்கிறது. இது குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறுகையில், "தி.மு.க ஹிந்தி திணிப்பிற்கு எதிராக பல்வேறு குரல்களை எழுப்பி வந்தது.



வட மாநிலத்தவர் குறித்து தி.மு.க செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்" எனக் கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார். திறனற்ற தி.மு.கவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பதிவிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News