தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் !
2021, 22ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
அதன்படி 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ள நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும்.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம்
தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசுத்துறை அலுவலகம் வரை தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும்.
உலகளவில் போற்றப்படும் தமிழ் மொழியின் படைப்புகள் பாதுகாக்கப்படும்.
Source: PUTHIYATHALAMURAI
Image Courtesy:Puthiyathalaimurai
https://www.puthiyathalaimurai.com/newsview/112764/Tamil-Nadu-assembly-budget-session-begins-today