தமிழகத்தில் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பு இருக்கா.. தலைமைச்செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை.!
தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நோய் பாதிப்பு அதிகமாக உள்ள காஞ்சிபுரம், தேனி, திருப்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மே 1ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனிடையே மே 2ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. அதே நேரத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குடன் மேலும் ஒருநாள் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது இன்று தெரியவரும்.
இந்நிலையில், இன்று தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நோய் பாதிப்பு அதிகமாக உள்ள காஞ்சிபுரம், தேனி, திருப்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, டிஜிபி திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர், சென்னை மநகராட்சி ஆறையர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதில் மே 1, 2ம் தேதிகளில் பொதுமுடக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கா என்பது இன்று நடைபெறும் ஆலோசனையில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.