கொரோனா தொற்று அதிகரிப்பு.. மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை.!

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

Update: 2021-03-23 06:40 GMT

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. இதனால் கடந்த முறை போன்று மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனையில் நோய் தடுப்பு பணி, தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்துவது மற்றும் கொரோனாவை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவை உள்ளதாக ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News