அதிகரிக்கும் கொரோனா தொற்று.. இன்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது.
தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.