முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு.!

கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக தலைமைச்செயலாளர் ராஜூவ்ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர்.

Update: 2021-04-23 12:22 GMT

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக தலைமைச்செயலாளர் ராஜூவ்ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர்.




 


தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இன்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக சார்பில் அரசு உயர் அதிகாரிகளான் தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று மற்றும் அதற்காக எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமருடன் விவாதிக்கப்பட்டுள்ளது.




 


இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைக்கப்படுவதற்காக, தற்போது தலைமைச்செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செலாளர்கள் சந்தித்துள்ளனர் என கூறப்படுகிறது.

Similar News