அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு.. 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2021-05-13 04:03 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி இன்று (13ம் தேதி) மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்க 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 கட்சிகளின் சார்பாக 26 பேர் கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தொடர்பான ஆலோசனைகளை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News