கொரோனா அதிகரிப்பால் தளர்வு இன்றி முழு ஊரடங்கு.. தமிழக அரசு பரிசீலனை.!
தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் உயர்ந்து கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் அனைத்துக்கட்சி எம்.எம்.எல்.ஏக்களுடன் நடந்த கூட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், கொரோனா முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனா பவரல் சங்கிலியை உடைப்பதற்காகவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை ஒரு சிலர் கொரோனா விடுமுறையாக கருதி வெளியில் ஊர் சுற்றி வருவது மிகவும் வேதனையாக உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருவதால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருத்துவர்கள் நிலைமையை எண்ணி மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அனைத்துக்கட்சி சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் என கூறினார். விரைவில தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது எனக்கூறினார். இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.