தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனாவுக்கு 10 ஆயிரம் பேர் மரணம்.!

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 39 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-02 04:00 GMT

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 39 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரமானதை தொடர்ந்து முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சற்று தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.




 


அதே போன்று நேற்று ஒரு நாள் பாதிப்பு (ஜூன் 1) 26 ஆயிரத்து 516 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 21 லட்சத்து 23 ஆயிரத்து 29ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 ஆயிரத்து 676 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 18 லட்சத்து 2 ஆயிரத்து 176 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே மாநிலத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து 490 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 24 ஆயிரத்து 722 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போன்று கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 10 ஆயிரத்து 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News