தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடி அபராதம் வசூல்.!
முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.200, எச்சில் துப்பியவர்கள், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறியவர்களுக்கு ரூ.500, விதிமீறும் கடைகளுக்கு 5000 ரூபாய் என அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அபராதத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
அதில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.200, எச்சில் துப்பியவர்கள், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறியவர்களுக்கு ரூ.500, விதிமீறும் கடைகளுக்கு 5000 ரூபாய் என அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.89,61,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததிற்காக ரூ.8,51,800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அபராதத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று குறையும் வரை, விதிமுறை மீறும் நபர்களிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.