கொரோனா விதிமுறைகள் மீறல்.. தமிழகத்தில் ரூ.14 கோடி அபராதம் வசூலிப்பு.!

நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற மத்திய, மாநில அரசுகள் விதித்திருந்தது. ஆனால் முறையாக பின்பற்றாத நபர்களிடம் இருந்து ரூ.14 கோடியே 59 லட்ச ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது.

Update: 2021-03-19 11:17 GMT

நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற மத்திய, மாநில அரசுகள் விதித்திருந்தது. ஆனால் முறையாக பின்பற்றாத நபர்களிடம் இருந்து ரூ.14 கோடியே 59 லட்ச ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது.

விதிகளை மீறிய ஆட்கள், நிறுவனங்களுக்குப் பொதுச் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியன அபராதம் விதிக்கின்றன.

நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 8,525 பேரிடம் 18,34,150 ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது. நேற்று வரை மொத்தம் 14 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது. அதிக அளவாகச் சென்னையில் 2 கோடியே 68 லட்சத்து 57 ஆயிரத்து 400 ரூபாய் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் பயணம் செய்யும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்பற்றாத நபர்களிடம் இருந்து அபராதம் வசூல் செய்வது தொடரும் என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News