தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஆராய்வதற்கு ஆட்சியர்களுக்கு உத்தரவு.!
தமிழகத்தில் தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் தாக்கம் அடுத்து வருகின்ற சில நாட்களில்தான் தெரியும். எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகளில் நோய் தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். அதிகமான கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.