தியேட்டர், சலூன் கடைகளுக்கு அனுமதி இல்லை.. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு.!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 26ம் தேதி முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 26ம் தேதி முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தொட்டுவிட்டது. முதல் அலையை விட இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளது. முதல் அலையில் ஒரு நாள் பாதிப்பு 7000 பேர் இருந்த நிலையில், இரண்டாம் அலையில் 14 ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் இயற்றி வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கும் அமலில் உள்ள நிலையிலும் தொற்று எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில், வருகின்ற 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து, வணிக வளாகங்கள், தியேட்டர்களை குறிப்பிட்ட காலத்திற்கு மூடுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை.
பெரிய கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை.
மளிகை கடை மற்றும் சிறிய கடைகள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கம்போல் செயல்படும் எனவும், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை, உட்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் செயல்பட அனுமதி இல்லை.