பாளை அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீர் வழங்கும் மாநகராட்சி அதிகாரிகள்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபடியாக முழு ஊரடங்கையும் அரசு அமல்படுத்தியுள்ளது.
இதனிடையே நாட்டு மருந்துகளையும் பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதில் முதற்கட்டமாக கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
அதே போன்று திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனை வெளியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்படுவதில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையும் கூட ஆகும்.