தமிழகத்தில் உச்சத்திற்கு செல்லும் கொரோனா.. இன்று 1,243 பேர் பாதிப்பு.!

தமிழகத்தில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் வீரியம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Update: 2021-03-20 12:55 GMT

தமிழகத்தில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் வீரியம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 1,243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,65,693 ஆக உயர்ந்துள்ளது.

அதே போன்று கொரோனாவில் இருந்து 634 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,45,812 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,590 ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இதே நாளில் இருந்துதான் தொற்றின் வீரியம் அதிகரிக்க தொடங்கியது. இதன் பின்னர் 23ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

Similar News