தமிழகத்தில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி.!
கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கிய நிலையில், கொரோனா தடுப்பூசியையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டது.
இதனையடுத்து தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கிய நிலையில், கொரோனா தடுப்பூசியையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் இணை நோய் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 30.31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.