கொரோனா தடுப்பூசி: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று மாலை முதல் முன்பதிவு செய்யலாம்.!
கர்நாடகாவில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று மற்ற மாநிலங்களும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்தை கடந்து வருகிறது.
இதே போன்று மற்ற மாநிலங்களிலும் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினமும் 2 லட்சத்தை கடந்து தொற்று எண்ணிக்கை பதிவாகிறது. இதனிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் மாநிலத்திற்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. கர்நாடகாவில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று மற்ற மாநிலங்களும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனை தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதற்கு http://www.cowin.gov.in என்ற இணையதளத்துக்குள் சென்று 'ரிஜிஸ்டர் மை செல்ப்' என்பதை அழுத்த வேண்டும் பின்னர் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து பெயர், வயது, உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்து கொள்ளலாம்.