தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் !

Update: 2021-10-10 03:49 GMT

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் எழுந்துள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் பல இடங்களில் கழிவுநீர் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மர்ம காய்ச்சலுக்கும், டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது . மேலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 2340 பேருக்கு டெங்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

அவசரகால நடவடிக்கையாக தெருக்களிலும்  பொது இடங்களில் தேங்கி இருக்கும் மழை நீர் மற்றும்  கழிவு நீரை   உடனடியாக அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் தர்போது கொரோனா பெருந்தொற்றை சமாளித்து வரும் நிலையில், இந்த டெங்கு மற்றும் மர்மகாய்ச்சல் வரும் மழைக்காலங்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Twitter 

Image : The Pharmaceutical Journal

Tags:    

Similar News