தமிழகத்தில் அராஜகம் தலை தூக்கிவிட்டது !அதிமுக ஊராட்சிமன்ற உறுப்பினரை வீடு புகுந்து தாக்கிய தி.மு.கவினர் !
முந்தைய அதிமுக ஆட்சியை விட தற்போது நடக்கின்ற திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆங்காங்கே கொலை, கொள்ளை,அடிதடி போன்ற செயல்களை திமுக நிர்வாகிகள் மட்டுமல்ல தி,மு,க முக்கிய புள்ளிகளே செய்து வருகின்றதை நாம் கடந்த நாட்களில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முன்விரோதம் காரணமாக அதிமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் மீது திமுகவினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் காரமேடு ஊராட்சி மன்ற உறுப்பினாராகவுள்ளவர் குமரன். இவருக்கும் கணைகளைப்பைய கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும், கடந்த சில மாதங்களாக திருமணத்திற்கு பெண் பார்க்கும் விஷயத்தில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த முன்விரோத மத்தியில் ராஜாவும் அப்பகுதி திமுக ஊராட்சி கிளை செயலாளரும் ராஜாவின் சகோதரருமான ராஜேந்திரன். 20 ஆட்களைக் கொண்டு குமரன் வீட்டிற்குள் புகுந்து குமரனை தாக்கினர்.
" ராஜாவிற்கு வயது 42 அவர் 18 வயதே நிரம்பிய ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முடிவெடுத்தார். பெண் வீட்டாருக்கு தெரிந்த பின் திருமணம் நின்று விட்டது அதற்கு நான் தான் காரணம் என்று எண்ணி என் மீது பகை வளர்க்க ஆரம்பித்தார். பெரும்பாலும் மது போதையில் என்னை வந்து தாக்குவார் ஆனால் இன்று அவரது சகோதரர் ராஜேந்திரன் உதவியோடு இருபது பேர் என்னை வீடுபுகுந்து தாக்கியுள்ளனர்."
என்று படுகாயங்களுடன் குமரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்த அடிதடி சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.
ஆட்சி மாறியது முதல் தமிழகத்தில் சட்ட ஒழுங்கும் மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.