சட்டமன்ற தேர்தல்: தமிழகம் முழுவதும் துணை ராணுவம், காவல்துறையினர் கொடி அணிவகுப்பு.!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Update: 2021-03-04 05:09 GMT

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

நெல்லை, தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் துணை ராணுவம், மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.


 



சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் 300க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பை நடத்தினர்.

அதே போன்று தேனி மாவட்டம், போடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பை நடத்தினர்.


 



வேலூர் மாவட்டத்தில் கொடி அணிவகுப்பில் துணை ராணுவத்தினர் 60 பேர், ஆயுதப்படையினர் 120 பேர், சிறப்பு காவல் படையினர் 35 பேர் உட்பட 309 பேர் பங்கேற்றனர்.

இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கொடி அணிவகுப்பின் நோக்கம் பொதுமக்கள் அனைவரும் பயப்படாதீங்க நாங்கள் இருக்கின்றோம். பயமின்றி அனைவரும் வாக்களிக்கலாம் என்பது ஆகும்.

Similar News