சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை.. தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்.!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 12ம் தேதி தொடங்க உள்ளது. அதே போன்று வாக்கு எண்ணிக்கை மே 2ம் தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

இந்நிலையில், சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படை மற்றும் 3 நிலையான கண்காணிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் தொடர்பாக அவர் பேசும்போது, தற்போது வரை 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகம் வந்துள்ளனர். மேலும் 2 நாட்களில் 15 துணை ராணுவப்படையினரை கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.