ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இபாஸ் தேவையில்லை.!

ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து வரும் பயணிகளுக்கு இபாஸ் கட்டாயமில்லை என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-10 04:16 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


 



இருப்பினும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து வரும் பயணிகளுக்கு இபாஸ் கட்டாயமில்லை என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கேரளாவில் இருந்து வருவோருக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாவட்டங்களுக்கு இடையே எந்தவிதப் கட்டுப்பாடுகள் இல்லை என்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Similar News