தமிழக விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்ட காலகேடு நீடிப்பு: மத்திய அமைச்சர் உறுதி!

தமிழக விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்ட காலக்கேடு நீடிக்கப்பட்டு இருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.

Update: 2022-12-12 14:02 GMT

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டங்களில் சேர்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு நவம்பர் 21ம் தேதி வரை விண்ணப்பிப்பவர்களுக்கு காப்பீடு உறுதி செய்யப்படும் என்றும் மத்திய வேளாண் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாநிலங்கள் அவையில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்ட காலங்களில் காலக்கெடுவை நீடிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.


இது குறித்து தன்னுடைய பதில் கடிதத்தை மாநிலங்களவையின் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த பதில்கள் பின்வருமாறு: 202-23 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சம்பா பருவ நெல் பயிர் காப்பீடு திட்டங்களில் பிரதான் மந்திரி பசில் பீமாய் யோஜனா மற்றும் விவசாயிகளின் சேர்வதற்கான காலக்கெடுவை நீடிப்பதற்கு கோரிக்கையை தமிழக அரசு இடமிருந்து கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி பெறப்பட்டது. இருப்பினும் மாநில அரசின் கோரிக்கையுடன் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களின் ஒப்புதல் இணைக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் காப்பீடு நிறுவனங்களின் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன்படி தமிழக அரசுக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டு அதன் ஒப்புதல் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில் தமிழக முதல்வரிடம் இருந்து அடுத்த சில நாட்களில் மற்றொரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் காப்பீடு நிறுவனங்களின் தேவையான ஒப்புதல் இணைத்து அனுப்பப்பட்டிருந்தது. இதில் உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை சேர்வதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடு தேதியை நவம்பர் 18ஆம் தேதியிலிருந்து தாண்டி நவம்பர் 21ம் தேதி வரை நீட்டித்து விவசாயிகளின் காப்பீடுகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இதன் காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் காலகேடு தேதி நவம்பர் 21ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News