தமிழ்நாடு அரசு சின்னம்: ஸ்ரீவில்லி புத்தூர் கோவிலா? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா?

தமிழ்நாடு அரசின் சின்னத்தில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அல்லது மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா?

Update: 2022-04-25 01:48 GMT

தமிழக அரசு நினைவு சின்னத்தில் இருக்கும் கோவில் கோபுரமானது ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோவில் கோபுரம் தான் என்று பலரும் தற்போது வரை எண்ணிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அந்த வகையில் அதில் திருப்புமுனை ஏற்படுத்துமாறு ஒரு ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவில், அந்தக் கோவில் கோபுரம் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டது தான் என்று கூறியுள்ளார். மேலும் இவற்றை நிரூபிக்கும் விதமாக நினைவுச் சின்னத்தை உருவாக்கிய கிருஷ்ணராவ் பலமுறை அது மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சின்னம் தான் என்று கூறியிருக்கிறார். 


இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு சென்னை மாகாணமாக இருந்த பகுதிகள் நான்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு மாநிலம் தலைநகராக சென்னை அறிவிக்கப்பட்டது. தமிழக அரசிற்கு நினைவுச் சின்னத்தில் உருவாக்கும் பொருட்டு , அந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி அவர்கள் தலைமையில் இது தொடர்பான பரிந்துரை குறித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. 


மேலும் மத்திய அரசு அளித்த பிறகு தமிழக அரசு நிறுவனம் உருவாக்கப்பட்டது கோவில் கோபுரம் போன்ற சின்ன அமைப்பை உருவாக்கினார். சென்னை அமைப்பின் சின்னமாக உருவாக்கப்பட்டது. மேலும் இந்த வடிவமைப்பை கிருஷ்ண ராவ் என்பவர் இதை உருவாக்கினார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு அரசு சின்னம் உருவாக்க திட்டமிடப்பட்ட போதிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை மையமாக வைத்தே அரசின் சின்னத்தை தான் உருவாக்கியதாக ஓவியர் கிருஷ்ணராவ் பலமுறை கூறியிருந்தார். இருந்தாலும் தற்போது வரும் தமிழக அரசு நினைவுச் சின்னத்தில் இருப்பதும் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரம் தான் என்று கூறப்பட்டு வருகிறது. 

Input & Image courtesy: Twitter source

Tags:    

Similar News