தீபாவளியன்று எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்! நேரத்தை அறிவித்த தமிழக அரசு!

தமிழகத்தில் தீபாவளி தினத்தின்போது எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்ற நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2021-11-01 13:28 GMT

தமிழகத்தில் தீபாவளி தினத்தின்போது எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்ற நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி தினத்தின்போது (அக்டோபர் 4) காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை பசுமை பட்டாசு வெடிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

மேலும், ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும். மேலும், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். தீப்பிடிக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily thanthi



Tags:    

Similar News