ரேஷன் கடைகளில் தி.மு.க. கொடி: தமிழக அரசுக்கு 'குட்டு' வைத்த உயர் நீதிமன்றம்.!
ரேஷன் கடைகளில் தமிழக அரசை முன்னிலைப்படுத்தாமல் திமுகவினர் ஏன் கட்சியை முன்னிலைப்படுத்தினர் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் தமிழக அரசை முன்னிலைப்படுத்தாமல் திமுகவினர் ஏன் கட்சியை முன்னிலைப்படுத்தினர் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜனவரி மாதம் முந்தைய அதிமுக அரசால் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கினர். அப்போது அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அதற்கான டோக்கன்களை வழங்கினர். இதற்கு டோக்கன்களை அரசியல் கட்சிகள் வழங்கக்கூடாது எனவும், நியாய விலை கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்கக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போதைய அரசு 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திமுக நிர்வாகிகள் தொண்டர்களை பெருங்கூட்டமாக அழைத்துக்கொண்டு தங்களின் கட்சி நிவாரணம் போன்று, கட்சி பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு ரூ.2000 வழங்கி வந்தனர்.
அதும் சில இடங்களில் கடை உள்ளே திமுக கட்சியின் பேனர்களை வைத்துக்கொண்டும், ஊழியர்களே அராஜகம் செய்யும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு மட்டுமே முன்னிலைப்பருத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது எனக் கூறினர். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், ஆளுங்கட்சி சின்னத்தை பயன்படுத்த கூடாது என்று தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளது.