கடன்களை வாங்கி தள்ளும் தி.மு.க: அரசு மக்கள் தலையில் நிதி சுமையை சுமத்த பார்க்கிறதா?

ஒரு ஆண்டிற்குள் சுமார் ஒரு லட்சம் கோடி கடன் களை வாங்கி மக்கள் தலையில் நிதி சுமையை சுமத்த பார்க்கிறதா?

Update: 2023-01-08 05:22 GMT

நிதி பற்றிய காரணமாக தமிழக அரசு கடந்த ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி அகல பாதாளத்தில் தமிழகத்தை தள்ளி இருக்கிறது.  மேலும் ஒவ்வொரு மாதமும் செலவினத்தை சமாளிக்க ஜனவரி, பிப்ரவரி என பட்டியில் நீண்டு கொண்டே போக நிதி பத்திரங்கள் மூலமாக சுமார் 51 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்கும் அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் கடன் கணிசமான அளவு இலக்கை விட அதிகரித்து இருக்கிறது. தி.மு.க அரசு மாநில வளர்ச்சி கடன் என்ற பெயரில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கோடி கடனை வாங்கி இருக்கிறது.


தி.மு.க அரசு திட்டமிட்டுள்ள கடன் அளவில் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக கடன்களை வாங்கி குவிக்கும் தமிழக அரசு. தமிழக நிதி அமைச்சர் பி. டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடன் வாங்கி தான் தமிழகத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறாரா? என்று போன்று கேள்விகளை தொடர்ச்சியான வண்ணம் பொருளாதார நிபுணர்கள் எழுப்பி வருகிறார்கள்.


சத்துணவு ஊழியர்கள், ஒப்பந்த செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ஊதியத்திற்காக போராடும் ஒரு நிலையில் எதற்காக கடன்களை வாங்க வேண்டும்? . கட்டுக்கடங்காத வகையில் கடன்களை வாங்கி திமுக அரசு மக்கள் தலையில் நிதி சுமையை சுமத்த பார்க்கிறதா? இன்று தமிழக பொருளாதார வல்லுநர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். 

Input & Image courtesy: J News

Tags:    

Similar News