கொரோனா நிவாரண நிதி: ரேஷன் கடைகளில் மே 10ம் தேதி முதல் ரூ.2000 வழங்கப்படும்.!
குடும்ப அட்டை தாரர்களுக்கு மே 10ம் தேதி முதல் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குடும்ப அட்டை தாரர்களுக்கு மே 10ம் தேதி முதல் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், கட்டுப்படுத்துவதற்காக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றால் வீட்டில் உள்ளவர்கள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2000 வழங்கப்படும் எனு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி முதல் தவணையாக ரூ.2,000 பணம் மே 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.