தமிழக அரசு மருத்துவமனைகளின் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க முடிவு.!
தினசரி 13 ஆயிரத்தை கடந்து கொரோனா தொற்று பதிவாகிறது. இதனால் நோய் தாக்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்லும்போது, அவர்களுக்கான படுக்கை வசதிகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தினசரி 13 ஆயிரத்தை கடந்து கொரோனா தொற்று பதிவாகிறது. இதனால் நோய் தாக்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்லும்போது, அவர்களுக்கான படுக்கை வசதிகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 6,045 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது. தொற்று பாதித்து மூச்சுதிணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னை மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கப்படவுள்ளன. தற்போதைய நிலவரப்படி அரசு, மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களில் 40 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.