ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு போட்ட தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர்கள் வருகின்ற 2.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் என்று ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-30 03:15 GMT

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி  ஆசிரியர்கள் வருகின்ற 2.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் என்று ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது மாணவர்கள் சேர்க்கை பணி, பள்ளிக்கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாட புத்தகங்கள் மற்ரும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல், மதிப்பீடு செய்த விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மெற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தெதி முதல் தினமும் பள்ளிக்கு வருகை புரிந்து பணியாற்ற வேண்டும்.


மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source:தமிழ்நாடு அரசு பிரஸ் ரிலீஸ் 

Tags:    

Similar News