பிளாஸ்டிக் பயன்பாட்டை நீக்க சொல்லும் அரசு - பழனி பஞ்சாமிர்தத்தை பிளாஸ்டிக் டப்பாக்களில் விற்கும் அறநிலையத்துறை | என் இந்த முறைப்பாடு?
தமிழக அரசின் முடிவுக்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை செயல்கள் அமைந்து இருக்கிறது.
தமிழகம் முழுவது பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்து இருக்கிறது. இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கீழ் உள்ள பழனி மலை முருகன் கோவிலில் தரம் மற்றும் பிளாஸ்டிக் டப்பாவுக்களில் தான் முருகன் பிரசாதமான பஞ்சாமிர்தம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் மஞ்சப்பைக் கொள்கைக்கு.எதிராக இந்து சமூக அறநிலையத்துறை பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் பக்தர்களிடம் விற்பனை செய்து வருகிறது என்பதை தெள்ளத் தெளிவாகிறது. இனியாவது பக்தர்கள் நலன் கருதி சபரிமலையில் வழங்குவது போல கோவில்களில் பஞ்சாமிர்தத்தை டின்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் பழனி மலை முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் என்பது உலகப் பிரசித்தி பெற்றது. தினமும் பள்ளி முருகன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு பக்தர்கள் பல்வேறு நபர்கள் வருகை தந்து செல்கிறார்கள். கோவிலில் உள்ள பஞ்சாமிர்த கடைகளில் பிளாஸ்டிக் டப்பாக்களின் மூலம் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. டின்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.40, பிளாஸ்டிக் விற்கப்படும் பஞ்சாமிர்தம் 35க்கும் கிடைக்கிறது.
தமிழக அரசு பிளாஸ்டிக்கை தவிர்க்க மஞ்சள் பை உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால் இந்த சமய அறநிலையத்துறை எதையும் கண்டு கொள்ளாமல் தரமற்ற பிளாஸ்டிகளின் விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே தங்கரதம் இழுக்க முன் பதிவு செய்யும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் பிளாஸ்டிக் டப்பாக்களில் பிரசாதம் வழங்கி இருக்கிறது. தமிழக அரசின் உத்தரவிற்கு முரணானதாக தெரிகிறது. இனியாவது பக்தர்களுக்கு டின்களில் பஞ்சாமிர்தம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு பக்தர்களால் வலியுறுத்தப்பட்டு தான் வருகிறது.
Input & Image courtesy: Dinamalar