சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றாதது திருப்தி அளிக்கிறது.. சென்னை உயர்நீதிமன்றம்.!

புதிய அரசு பல்வேறு உயரதிகாரிகளை இடமாற்றம் செய்தாலும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

Update: 2021-05-10 11:58 GMT

புதிய அரசு பல்வேறு உயரதிகாரிகளை இடமாற்றம் செய்தாலும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

ஆக்சிஜன் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

வழக்கமாக புதிய அரசு பொறுப்பேற்றால் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட அன்று முதல் தற்போது வரை சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பல்வேறு முறைகளை கையாண்டு வருகிறார். எனவே அவருக்கு பதிலாக புதிய அதிகாரியை நியமனம் செய்தால் பல சிக்கல்களை உண்டாக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News