ஊரடங்கிற்கு பின்னர் கொரோனா பரவல் குறைகிறது.. சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் அரசு புறநகர் மருத்துவமனையில் புதிய கொரோனா அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர். இதன் பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் விகிதம், கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், தொற்று பரவல் விகிதம் குறைந்துள்ளது. மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.
தற்போது ஏற்பட்டுள்ள 2வது அலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்களாகவே வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.