ஏப்ரல் 3ம் தேதி தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்.!
கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனிடையே ஒரு புறம் தேர்தல் நெருங்கி வருகிற சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெயில் காலங்களில் ஜூஸ், மற்றும் தர்பூசணி உள்ளிட்ட கடைகள் ஆங்காங்கே சாலைகளில் புதியதாக திறக்கப்பட்டு வருகிறது.