தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்கள் அதிகனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 3 நாட்கள் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருபுபதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2021-11-23 06:17 GMT
தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்கள் அதிகனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 3 நாட்கள் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருபுபதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நவம்பர் 25 முதல் 27ம் தேதி வரை அதிகனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்து 24 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென்தமிழகத்தை நோக்கி நகருவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News