தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் நிரம்பும் மருத்துவமனை படுக்கைகள்.!
பல கொரோனா பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டிருந்தது. எனவே கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் சூழலில் மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2,000-த்தைக் கடந்து பதிவாகிறது.
இதன் காரணமாக மருத்துவமனையின் படுக்கை வசதிகள் நிரம்புகிறது. தமிழகம் முழுவதும் 1.38 லட்சம் படுக்கை வசதிகள் கொரோனா நோயாளிகளுக்காக உள்ளது.
கடந்த ஒரு சில மாதங்களாக தொற்றின் பாதிப்பு குறைந்திருந்தது. இதனால் பல கொரோனா பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டிருந்தது. எனவே கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் சூழலில் மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனிடையே மாவட்டம் தோறும் பராமரிப்பு மையங்களும் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ளது.