கோயில் நிலம்: தற்கால சந்தை மதிப்பீட்டில் வாடகை நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் வரும் வாடகையை தற்கால சந்தை மதிப்பீட்டில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் வரும் வாடகையை தற்கால சந்தை மதிப்பீட்டில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் சுமார் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு சம்பாதித்து கொண்டு, அறநிலையத்துறைக்கு அவர்கள் குறைந்த அளவிலான பணத்தை வாடகையாக கட்டி வருகின்றனர்.
இது கோயிலுக்காகவும், பக்தர்களுக்காவும் விலை மதிப்பற்ற சொத்துக்களை வாரி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில, தற்கால சந்தை மதிப்பீட்டில் நியாயமான அளவு வாடகைத் தொகை அச்சொத்துக்களின் மேல் நிர்ணயிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் கூறிய தீர்ப்பில், கோயிலுக்கு பெயரளவில் வாடகை செலுத்தி விட்டு, அந்த நிலத்தில் கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. தவறுகள் நடப்பதை அறிந்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆவணங்களைப் பெயரளவில் வைத்திருப்பது, இவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி இருப்பது தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Source: trramesh Twiter
Image Courtesy:Deccan Herald