தமிழகத்தில் நாளை மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது.. நீதிமன்றத்தில் மருத்துவ பணிகள் கழகம் தகவல்.!
எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சாலைகளில் சாரை சாரையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்துடனே வாழ்ந்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் நாளைக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக மருத்துவ பணிகள் கழகம் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறைந்து கொண்டே செல்கிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வருகிறது.
எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சாலைகளில் சாரை சாரையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்துடனே வாழ்ந்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சை மற்றும் மருந்துகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரனை நடத்தியது.
அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் நாளைக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடுவோம் என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைப்பதை நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.