தொன்மையான 92 கோவில்களில் திருப்பணி தொடங்க அறநிலையத்துறை குழு ஒப்புதல்!

தமிழகத்தில் உள்ள தொன்மையான 92 கோவில்களில் திருப்பணிகளை துவங்க அறநிலைத்துறை வல்லுநர் குழு ஒப்புதல்.

Update: 2022-10-13 01:32 GMT

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தொன்மையான துணித் இரண்டு கோவில்களில் திருப்பணிகளை தற்போது துவங்குவதற்கு மாநில அளவிலான வல்லுனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 42வது வல்லுனர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் தான் தற்போது பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளிக்கும் தகவல் வழியாக இருக்கிறது. சென்னை கபாலீஸ்வரர் கோவில் மயிலாப்பூரில் உள்ளது. விருதுநகர் சின்ன சாவடி சென்னை கேசவ பெருமாள் கோயில், சிவகாசி விஸ்வநாதர் கோவில், சேலம் மேட்டூர் பத்திரகாளியம்மன் கோயில், பவானி வரதராஜப் பெருமாள் கோயில், கன்னியாகுமரி கண்ணன்புதூர் முப்பிடாரி அம்மன் கோயில், அகத்தீஸ்வரம் பதினெட்டாம்படி இசக்கியம்மன் கோயில் ஆகிய கோவில்கள் உட்பட சுமார் 92 கோவில்களில் திருப்பணிகளை துவங்குவதற்கு தற்போது மாநில அளவில் வல்லுனர் கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் கோவில்களின் திட்ட பணிகள் மதிப்பீடு செய்த விரைவில் பணிகள் முடிக்க வேண்டும். இதற்கான பணிகளை துவங்குமாறு திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன் வல்லுனர் குழு உறுப்பினர் தலைமை பொறியாளர் பொருளியல் துறை வல்லுனர் கண்காணிப்பு பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Input & Image courtesy: Dinakaran News

Tags:    

Similar News