தமிழகத்தில் மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.!
தமிழகத்தில் இன்று மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக புதிதாக ஆட்சி அமைத்த பின்னர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்து வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ், உள்துறை இணை செயலாளராகவும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் நகராட்சி நிர்வாக இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கார்த்திகேயனும், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் இணை செயலாளராக திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.