3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-05-08 03:27 GMT

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக கோவை மாநகர காவல் ஆணையராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே மதுரை காவல் ஆணையராக பணியாற்றியவர்.

இதேபோன்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Similar News