மீண்டும் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்த தமிழக அரசு.!

திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிடமாற்றம் செய்து வருகிறது. இதனால் அதிகாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Update: 2021-05-29 08:36 GMT

திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிடமாற்றம் செய்து வருகிறது. இதனால் அதிகாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், காவல்துறை கணினி மயமாக்கல் எஸ்.பியாக இருந்த வருண்குமார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஏடிஜிபியாக இருந்துவரும் ஏ.கே. விஸ்வநாதன், காவலர் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார், தீயணைப்புத் துறை டிஜிபியாக கரண் சின்கா, சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக சீமா அகர்வால், காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News